திருமணமான பெண்களை கணவன்மார்கள் வரதட்சனை கேட்டு அல்லது வேறு ஏதாவது பிரச்னைக்காக கொடுமைகள் செய்தததாக செய்திகளை படித்திருப்போம். ஆனால் தற்போது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் கருப்பாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக அவரை தீயில் கொளுத்தியுள்ளார்.
உ.பி மாநிலத்தை சேர்ந்த சத்யவீர் சிங் என்பவர் பிரேம் ஸ்ரீ என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு மணந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அழகான குழந்தை பிறந்தது. இதற்கிடையில் தன் கணவர் கருப்பாக இருப்பதால் மனைவி கணவரை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
Read More: விஜய் மல்லையாவிற்கு ஓட்டு இருக்கு...! ஓட்டு போட அவரு இந்தியவுல இருக்கிறாரா?
இந்த சம்பவம் குறித்து சத்யவீர் சிங்கின் சகோதரர் ஹர்வீர் சிங் கூறும் போது : "சத்யவீர் சிங் கருப்பாக இருந்தது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. அவ்வப்போது குடும்பத்தாரிடம் இது குறித்து சொல்லி வருத்தப்படுவார். ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய காரியத்தை செய்வார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை." என கூறினார்.
