கிழக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கம் காரணமாக பால்பண்ணையாளர்களின் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகியமாவட்டங்களில் அண்மைக்காலமாக திடீரென மாடுகள் உயிரிழப்பதன் காரணமாக பசுமாடுகளில் இருந்து அதிகளவிலான பால் உற்பத்தியைப் பெறமுடியாது பால்பண்ணையாளர்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
அத்துடன் பெறப்படும் பசும்பாலினை பொதுமக்கள் நுகர்வதில் ஆர்வம் காட்டாதுள்ளனர். இதனால் பால்விற்பனையும் குறைவடைந்துள்ளது. கால்நடைகளை நம்பி சீவியம் நடத்தும் பால்பண்ணையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கிழக்கில் மாடுகள் உயிரிழப்புக் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையே பால்விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கால்நடைவளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு பகுதியில் உயிரிழந்த கால்நடை வளர்ப்பாளரகளின் மாடுகளுக்கு இதுவரை உரிய நஷ்டஈடு கூட பெற்றுக்கொடுக்கப்டவில்லை. இதனால் பண்ணையாளர்கள் வறுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
செ.துஜியந்தன்
