ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர எம். பி அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து பேசியபோது காதல் ரோஜாவே... கண்ணே நீ எங்கே என்கிற பாடலை பாடினார்.
கட்சி செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் உரையாற்ற மேடைக்கு வந்த இவர் முதலில் சிங்களத்தில் ஒரு பாடலை பாட போவதாக தெரிவித்து பாடி அசத்தினார். தமிழில் ஒரு பாடலை பேச்சின் இடையில் பாடுவார் என்று தெரிவித்தார்.
அதன்படி காதல் ரோஜாவே ... கண்ணே நீ எங்கே என்கிற பாடலை சற்று பாடினார். சபையோர் கை தட்டி உற்சாகப்படுத்தினர். அண்மையில் யாழ். மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு சென்றபோதும் இவர் இப்பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைதீவு நிருபர்
