மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கிராமத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஓய்வுநிலை கிராமசேவை உத்தியோகத்தர் சமாதானநீதவான் பொன்னையா சின்னத்தம்பி இன்று வியாழக்கிழமை காலமானார்.
1942 இல் பிறந்த இவர் புதுக்குடியிருப்பு கிராமத்தின் சமய, சமூக , அபிவிருத்திக்காகபாடுபட்டவராவார். இக் கிராமத்தில் கிராம சேவகராக சேவையாற்;றிய காலத்தில் பிரதேச மக்களின் மனதில் சேவையால் இடம்பிடித்த ஒருவராவார்.
கடந்த வருடம் இருந்து மண்முனைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு கிராமங்களின் வரலாற்றை நூலுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஏழு பிள்ளைகளின் தந்தையான அமரர் சின்னத்தம்பி விதானையாரின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு இந்துமயானத்தில்; தகனம் செய்யப்படவுள்ளது.
