மருதமுனை ஹரீஷாவின் சொட்டும் மிச்சம் வைக்காமல் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக பேராசிரியர் செ.யோகராசா, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா விசேட அதிதியாக உமாவரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு நூல் நயவுரையினை இலக்கிய மதிப்பீட்டாளர் ஜெஸ்மி எம்.மூஸா நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியினை சிரேஷ்ட சட்டத்தரணி பதில் நீதிபதி ஏ.எம்.பதுறுதீன் சார்பில் சட்டத்தரணி றாஸீம் ஹமீட் பெற்றக்கொண்டார். விசேட பிரதியினை இன்ஜினியரிங் கண்ஸ்ரக்ஷன் ஏ.எம்.எம்.முஸம்மில் சிறப்பு பிரதியினை எவர் பெஸ்ட் எம்.எச்.ஏ.அஜ்மீர் ஆகியோர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்




