கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து பெண் ஒருவரால் அபகரிக்கப்பட்ட தாலிக்கொடி போலியான கிலிட்டு நகை என்று தெரிய வந்து உள்ளது.
பெண் ஒருவர் கொண்டு வந்திருந்த பேர்ஷை நீதிமன்றில் வைத்து இன்னொரு பெண் அபகரித்தார்.
பேர்ஷுக்குள் பெறுமதியான தாலிக்கொடி இருப்பதாக சொல்லி தேடி பறி கொடுத்தவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் காவல் கடமையில் இருந்த பொலிஸார் இவர் வெளியிட்ட சந்தேகத்தை அடுத்து ஓட்டோவில் அவசரமாக புறப்பட தயாரான ஒரு பெண்ணை மறித்தனர். இவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் பயங்கர வாக்குவாதம் இடம்பெற்றது. இவரை உள்ளே கொண்டு வந்து பெண் பொலிஸார் மூலமாக முழுமையான அங்க சோதனை செய்து பார்த்தபோது இவரின் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தாலிக்கொடி கண்டு பிடிக்கப்பட்டது.
இவர் மேல் விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார். கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் தாலிக்கொடியை சோதனை செய்து பார்த்தபோது அது தங்கத்தால் ஆனது அல்ல என்றும் கிலுட்டு நகை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இருப்பினும் திருட்டு குற்றத்துக்காக பெண் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
காரைதீவு நிருபர்
