போதைப்பொருட்களை கிராமங்களில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இவ்வாறு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எம்.ஜீ.யூ.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் சிறுவர் சேமிப்புச் செய்தவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராச்சி உதவி ஆணையாளர் சின்னராசா பிரகாஸ் கலந்தகொண்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி....
இன்று நாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எமது நாட்டின் வளத்தையும், எதிர்கால சந்ததியின் வளமான வாழ்க்கையையும் கறையான் புற்றுப்போன்று போததைப்பொருள் பாவனை அரித்துக்கொண்டிருக்கின்றது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் எக்போதும் கண்கானிப்புக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்
உங்கள் பிள்ளை எங்கு செல்கின்றது, யாரோடு பழகுகின்றது, வீட்டிற்கு எத்தனை மணிக்கு வருகின்றது. அவனது அன்றாடச் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளது. என்பதைப்பற்றி கூர்ந்து கவனிக்கவேண்டும். இப்போது மாணவர்களை இலக்கு வைத்தே போதைப் பொருட்களை விற்பனை செய்ர்வருகின்றனர். எமது செல்வங்களான பிள்ளைகளை இந்த அரக்கனிடம இருந்து நாம் பாதுகாக்கவேண்டும்.
என்றுமில்லாத வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருட்பாவனையை முற்றாக ஓழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பொலிஸாரும் அதற்காக பாடுபட்டுவருகின்றோம்.
எமது பொரிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்களைவ விற்பனை செய்வோர். அதனை வாங்குவோர் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு இரகசியத் தகவல்களை தெரிவிக்கவேண்டும். உங்கள் பாதுகாப்புக்காகவே பொலிஸார் உள்ளனர்.
எந்த நேரமும் பொதுமக்கள் பொலிஸாரை அணுகமுடியும். குருமண்வெளி கிராமத்தில் இயங்குகின்ற இச்சங்கமானது திறமையாக செயற்பட்டுவருவதை நான் அறிவேன். சேமிப்போடு மட்டும் நின்றுவிடாது சமய, சமூக பணிகளில் இச்சங்கம் செயற்படுகின்றது. அதனை வழிநடத்தும் தலைவர் உட்பட சங்க நிர்வாகிகளை பாராட்டுகிறேன் என்றார்.




