பிரதமரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை வளாகத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட காதல் உறவு முறிந்தமையால் லிரக்தியடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தில்ருக் சமரசிங்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
பேஸ்புக் காதலிக்கு எழுதிய கடிதமொன்று உயிரிழந்த அதிரடிப்படை வீரரின் உடமையிலிருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது
