மகியங்கனை பகுதியில் விபத்திற்கு இலக்காகி உயிரிழந்த பத்து பேரின் சடலங்களுக்கும் மட்டக்களப்பில் ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மகியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
.
இந்த நிலையில் சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டதுடன், பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையை உலுக்கியுள்ள இந்த கோர சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருவதுடன், உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய காட்சி அனைவர் மனதையும் உருகச் செய்துள்ளது.




