கல்முனையைச் சேர்ந்த பிரபல சிற்பக்கலைஞர் கதிரமலை நவமணி நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மரத்தினால் செதுக்கியுள்ளார்.
போதைப்பொருளற்ற தெய்வீக நாட்டைக்கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்பட்த்தினை இலங்கை தேசத்திற்குள் கச்சிதமாக செதுக்கியுள்ளார்.
வேப்பமரத்தினால் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தினை கொழும்பில் நடைபெறவுள்ள கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின்போது கலைஞர் கதிரமலை நவமணி ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளார்.
ஜனாதிபதியினை இலங்கைத்தேசத்திற்குள் மரத்தினால் செதுக்கிய முதல் சிற்பக்கலைஞராக நவமணி திகழ்கிறார். இதனை செதுக்குவதற்கு பதினைந்து நாட்கள் எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
செ.துஜியந்தன்

