மனித வாழ்க்கைக்கு அவசியமான விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேற்கொண்டு உள்ள உலகின் முன்னிலை நூறு விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்களுக்குள் ஒருவராக சம்மாந்துறை பிரதேசத்தில் கோரக்கர் கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் இவ்வருடம் இடம் பிடித்து உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞானம் மற்றும் கலாசார ஸ்தாபனம் மனித வாழ்க்கைக்கு அவசியமான விஞ்ஞான ஆய்வுகள்இ கண்டுபிடிப்புகள் விருது - 2018-2019 இற்காக உலகம் பூராவும் இருந்து விண்ணப்பங்களை கோரி இருந்தது. பல இலட்சம் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்கள் இத்திறந்த போட்டிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இவற்றுக்குள் இருந்து நூறு விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஸ்தாபனத்தால் தரப்படுத்தி தெரியப்பட்டன. இவற்றுக்குள் வினோஜ்குமாரின் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளும் தெரிவாகி உள்ளன. சூஸ் ஹெல்ப்பர் என்கிற இவரின் கண்டுபிடிப்பு இவற்றுள் முக்கியமானது.
வருடாந்தம் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 2012 ஆம் ஆண்டு தெரிவான கனிந்த நாணயகாரவுக்கு பிற்பாடு முதல் நூறு இடங்களுக்குள் தெரிவாகி
உள்ள இலங்கையர் வினோஜ்குமாரே ஆவார்.வினோஜ்குமார் யாழ்.
பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீட முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்
இவர் தனது சாதனை பற்றி கூறுகையில்...
ஐக்கிய நாடுகள் சபையின் கல்விஇ விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனத்தின் (UNESCO) மூலம் 2018-2019ம் ஆண்டுகளுக்கான வாழ்க்கைக்கு தேவையான சிறந்த விஞ்ஞான ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் விருதுகளுக்காக தேடல்களை உலக முழுவதிலிருந்தும் கடந்த டிசம்பரில் ஆரம்பித்திருந்தது. அதில் வயது வித்தியாசங்களின்றி பல லட்சக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது ஆய்வுத் திட்டங்களின் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.
அதில் வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த நூறு ஆய்வுத் திட்டங்கள் கண்டுபிடிப்புக்களைத் தெரிவு செய்துள்ளது.மேலும் அதிலிருந்து உலகில் மிகச்சிறந்த மூன்று திட்டங்களுக்கு தலா $350,000 வீதம் பணப்பரிசை நவம்பர் மாதத்தில் பிரான்ஸில் நடைபெறும் விருது வழங்கும் வைபவத்தில் வழங்கவுள்ளது.
இலங்கையிலிருந்து கடைசியாக 2012ம் ஆண்டு நூறுக்குள் கனிந்த நானயக்கார தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரிடம் அது பற்றி ஆராய்ந்து 2013இ 2014 2015 2016 2017 2018 ஆண்டுகளின் தொடர்ச்சியாக விண்ணப்பித்து வந்தேன். ஆனால் அதற்குள் என்னால் மட்டுமல்ல இலங்கையிலிருந்து விண்ணப்பித்த யாருமே வரமுடியவில்லை. ஆறு வருடங்களில் பின்னர் எனது கண்டுபிடிப்பு தெரிவு செய்யப்பட்டமை சிறந்த ஆய்வு அறிக்கை மற்றும் பல ஆய்வாளர்களினுடைய அனுபவங்களை பெற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்தவருடம் இல்லவிடினும் எதிர்வரும் வருடங்களில் உலகில் மிகச்சிறந்த மூன்று திட்டங்களில் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதற்குத் தேவையான அனுபவம் ஆய்வுகள் என்னிடமுள்ளன.
அதில் எனது "SHOES' HELPER " எனும் கண்டுபிடிப்பும் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இக் கண்டுபிடிப்பு LK/P/20297 இலக்கத்தின் கீழும் ஆக்கவுரிமைக் காப்பீட்டுப் பத்திரத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட 'ஆயிரம் படைப்புக்கள்' எனும் தேசிய மட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் ஒரு இலட்சம் பணப்பரிசையும் பெற்றதோடு கடந்த பெப்ரவரி தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிப் போட்டியில் பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் 'சர்வதேச வெள்ளி விருதும்' Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD ,
Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருதும் பெற்றுக்கொண்டது.
'இந்த வெற்றிகள் என்னுடையதாக இருந்தாலும் இதற்கான ஊக்குவிப்புக்கள் மற்றும் ஆலோசனைகள் எமது சகோதர இனத்தவர்களின் பங்களிப்புக்களே அதிகம்.' மேலும் இப்படிப்பட்ட போட்டிகளும் ஒரு சிறந்த வாய்ப்புக்கள் மற்றும் படிப்புக்கள்தான் என அறிந்துணர்ந்த எனது யாழ். பல்கலைக்கழக தொழினுட்ப பீட பீடாதிபதிஇ பதிவாளர் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் பல்கலைக்கழக நேரங்களில் மனப்பூர்வமாக அனுமதிகளை வழங்கினார்கள் அவர்களுக்கும் எனது பாடசாலைசாலைகளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சம்மாந்துறை ஶ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கும்இ மேலும் எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் அன்பான உறவுகளுக்கும் என் பணிவான நன்றிகள் என்றார்.

