கல்முனை வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரனின் வழிகாட்டலில் நடைபெற்றுவருகின்றன.
கல்முனை வடக்கில் இதுவரை 11 ஆயிரத்திற்ம் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்ப் பட்டுள்ளனதாகவும் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை கிடைக்க இருப்பதாகவும் டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தெரிவித்தார்
பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இது வரை தடுப்பூசி செலுத்திக் கொள்தாவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும்பணி முன் னெடுக்கப்பட்டன. பிரதேசத்தில் முதலாம் கட்டத் தடுப்பூசியினை பெறாதவர்களும் மற்றும் இரண்டாம் கட்டத் தடுப்பூசியினை பெறாதவர்களும் இங்குள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனை வேண்டுகோள்விடுத்துள்ளது.
-செய்தியாளர்-செ.துஜியந்தன்-
