களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற .
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்றுவருகினறன.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள இதுவரை முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத கர்ப்பிணித்தாய்மாருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
இதேவேளை 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளும் இங்கு தொடர்ச்சியாக பிரதேச தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டுவருகின்றன.
செய்தியாளர்-செ.துஜியந்தன்-
