கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இவ் வருடம் நடைபெறாது என கல்முனை வடக்கு பிரதேச செயலக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தன.
மகாபாரத இதிகாசக் கதையினை மையமாகக் கொண்டு 18 தினங்கள் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் புரட்டாதி மாதத்தில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றக்காரணமாக இவ் ஆலய உற்சவத்தினை நடத்தமுடியாது போயுள்ளது.
1990 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் ஆலய உற்சவம் நடைபெறவில்லை. இதேபோன்று 31 வருடங்களுக்குப் பின்னர் 2021 இல் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக ஆலய உற்சவம் தடைப்பட்டுள்ளது.
இங்கு ஆலய திருக்கதவு திறக்கப்படாது ஆலய வெளிமண்டபத்தினுள் மடை வைத்து பூசகரால் ஒரு நேரப்பூசை நடைபெறுகின்றது. இந் நிலையில் பக்தர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு திரௌபதை அம்மனை வழிபடுமாறும்hறு ஆலய பிரதம பூசகர் அ.சீவரெத்தினம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-செய்தியாளர்-செ.துஜியந்தன்-

