இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் அகப்பட்டுள்ளதா என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்
யுத்தத்தைத் தொடர்ந்து நடாத்துவதற்காக கடந்த முப்பது வருடங்களாக ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் பல நாடுகளிலிருந்தும் கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது. வாங்கிய கடன்கள் அனைத்தும் போருக்கும் அழிவுக்கும் பயன்படுத்தப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை.
யுத்தம் முடிந்த பொழுது பொருளாதார ரீதியாக நிலைமைகள் மிகப் பலவீனமாக இருந்தன. வேலை வாய்ப்பு வாழ்வாதார பிரச்சினை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள பதவி உயர்வு பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுத்தன. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தொழிற்துறைகளை வெளிநாட்டு உதவிகளுடன் அமைத்திருக்க வேண்டும். மாறாக எந்தவிதப் பிரயோசனமுமற்ற கப்பல்கள் வராத ஹம்பாந்தோட்டை துறைமுகம் விமானங்கள் வராத மத்தள விமான நிலையம் போன்றவற்றையே உருவாக்கினார்கள். இவற்றால் எந்தவித பொருளாதார இலாபமும் நாட்டு மக்களுக்குக் கிட்டவில்லை.
நல்லாட்சியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியதற்கான கடனை சீனா திரும்பக் கேட்டபோது கடனைக் கட்ட வக்கில்லாமல் துறைமுகத்தையே 99 வருடக் குத்தகைக்கு சீனாவிற்குத் தாரை வார்த்தார்கள். சீனாவும் சுயநலத்திற்காக தனது விஸ்தாரிப்பை முன்னெடுப்பதற்காக இலங்கைக்குத் தேவையான வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கு உதவிகள் வழங்குவதை விடுத்து காலூன்றுவதற்குத் தேவையான உதவிகளையே தற்போதும் செய்து வருகிறது.
இப்பொழுது இலங்கையை பொருளாதார ரீதியாக நொண்டியாக்கி முழுக்க முழுக்க பொருளாதார ரீதியில் தன்னிடத்தில் தங்கியிருக்கும் நாடாக சீனா மாற்றி வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்செயலாக நடந்த விடயங்கள் அல்ல. திட்டமிட்ட வகையில் சீன அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொள்கிறது என்பது வெளிப்படை.
செய்தியாளர் : பாக்கியராஜா மோகனதாஸ்.
