1887 பாரதியின் தாய் மரணமடைய பாட்டியான பாகீரதியம்மாளிடம் வளர்ந்தார். பாரதியின் தந்தை 1989 இல் மறுமணம் புரிகிறார்.சுப்பையாவுக்கு இதே ஆண்டில் உபநயனம் கொடுக்கப்படுகிறது. 1893 இல் பதினொரு வந்து சிறுவனான சுப்பையாவை எட்டயபுர எட்டப்ப நாயக்கர் மன்னர் சமஸ்தான புலவர்களடங்கிய பெருஞ் சபையில் சுப்பையாவின் தமிழ்கவித் திறனை சோதித்து பாரதி(கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றார். அன்று முதல் சுப்பையா பாரதியானார்.
1894 -97 வரையான காலப்பகுதியில் ஐந்தாம் படிவம் வரை படித்துக்கொண்டிருக்கும் போது தமிழ்ப்பண்டிதர்களுடன் சொற்போர்கள் இலக்கண இலக்கிய வாதப்பிரதிவாதங்களில் பங்குபற்றி பாராட்டுப் பெறுகிறார். அதன் பின்னரான 1896 இல் பதினான்கு வயதாக இருக்கும்போது ஏழு வயது செல்லம்மாவை திருமணம் செய்கிறார்.1896 இல் தந்தை சின்னச்சாமி ஐய்யர் மரணமடைந்ததனால் பெருந்துயர் அடைந்து வறுமையின் பிடிக்குள் ஆளானார்.
எட்டயபுர அரண்மனையில் பணி கிடைத்தும் சில காலத்திலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார்.1898 - 1902 வரையான காலப்பகுதியில் காசியிலுள்ள குப்பம்மாள் அத்தையுடன் வசித்து படித்து வந்தார். அகலபாத் சர்வ கலாசாலையில் பிரவேச பரீட்சையில் தேர்வு எழுதினார். காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம்இ ஹிந்தி ஆங்கிலம் வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதுடன் பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் ஈடுபட்டார். இக்காலப்பகுதியிலேயே கச்சம் வாழ்விட்ட தலைப்பாகைஇ மீசை என்பவற்றை அடையாள தோற்றமாக்கிக் கொண்டார்.
1902 -1904 வரையான காலப்பகுதியில் எட்டயபுர மன்னரால் அழைத்து வரப்பட்டு மன்னருக்கு தோழராக இஅரச சபைக் கவிஞராக பணியாற்றிய வேளையில் ஏழு ஆண்டுகள் பாட்டு எழுதாமல் இருந்ததுடன் அரண்மனையை விட்டு வெளியேறினார்.
1904 ஆம் ஆண்டு மதுரையில் விவேகபாநு இதழில் 'தனிமை இரக்கம்' என்ற பாரதியின் முதற்பாடல் அச்சேறுகிறது. வாழ்நாள் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராக பணியாற்றியதுடன் மதுர சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ்ப் பண்டிதராக கடமையாற்றினார்.
சென்னை சுதேச மித்திரனின் உதவியாசிரியராக(1904 -06) பணிபுரிந்ததுடன் ஜி.சும்பிரமணிய அய்யரிடம் பயிற்சி பெற்று சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத பத்திரிகையின் பொறுப்பாசிரியராக கடமையாற்றியதுடன் வாழ்நாளில் இறுதியிலும் இவ்விதழின் உதவி ஆசிரியராக பணியாற்றி மறைந்தார். ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை பாட்டின் மூலம் வெளிக்கொணர்ந்த பாரதிஇ தேச விடுதலைக்கு முன்னராகவே உயிர் நீத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1905 ஆம் ஆண்டில் வங்கப்பிரிவினை ஏற்பட்டதனால் சமூக சீர்திருத்த வாதியாக திகழ்ந்ததுடன் அரசியலில் தீவிரமாதியுமாக செயற்பட்டார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவியை சந்தித்து தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு 1905- 06 காலப்பகுதியில் தோற்றம்பெற்ற சென்னை புரட்சிகர வாரப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இயங்கியுள்ளார்.
சுதந்திரப் போரில் பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய் காட்டுத்தீயாய் சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச்செய்தது. பாரதியார் இந்தியப் பத்திரிகையின் மூலம் மக்களிடையே விடுதலையுணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பாரதியின் எழுச்சிக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஸ் ஆட்சி பத்திரிகைக்கு தடை விதித்ததுடன் அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் தேசியவுணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து பொதுமக்களை ஒருங்கிணைத்ததினால் தேசியக் கவிஞராக அனைவராலும் போற்றப்பட்டார்.
வி.கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்து சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்களடங்கிய நான்கு பக்கப் பிரசுரங்களை வெளியீட்டு இலவசமாக விநியோகிக்கிறார். 1908 இல் சுதேச கீதங்கள் என்ற முதற் கவிதை தொகுப்பை பாரதி வெளியீடுகிறார். 1908- 1910 காலப்பகுதியில் இந்திய வாரப்பத்திரிகை புதுவையில் வெளியாகி பிரிட்டிஸ் அரசாங்கத்தின் மீது எழுத்துக்களினால் நெருப்புமழை பொழிகிறது.
1909 இல் பாரதியின் இரண்டாவது கவிதைத் தொகுதி ஜென்ம பூமி வெளியீடப்படுகிறது. 1910 இல் விஜயா தினசரி சூர்யோதயம் வாரப்பதிப்பு பால பாரதா ஆங்கில வாரப்பதிப்பு கர்மயோகி மாதப் பதிப்பு யாவற்றையும் பிரிட்டிஸ் சர்கார் தடுக்கின்றனர். 1910 இல் கனவு என்ற சுயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணிவாசகம் நூல் வெளியீடப்படுவதுடன் 1912 இல் கீதையை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்கிறார். கண்ணன் பாட்டு குயில் பாஞ்சாலி சபதம் புதிய ஆத்தி சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியால் எழுதப்படுகின்றன. இக்காலத்திலேதான் பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் பிரசுரமாகிறது.
கடயம் வாசம் செய்யும் 1918 -20 காலப்பகுதியில் 1919 இல் சென்னைக்கு விஜயம் செய்து ராஜாஜி வீட்டில் காந்தியை சந்திக்கிறார். 1920 டிசெம்பரில் சென்னை சுதேச மித்திரனில் மீண்டும் உதவியாசிரியராக பணி புரிகிறார். 1921 ஆகஸ்டில் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்ற போது எதிர்பாரதவிதமாக அந்த கோயில் யானை பாரதியை தூக்கியெறிந்ததால் பலத்த காயமுற்று நோய்வாய்ப்பட்டு அதிர்ச்சியால் நோயுற்று அதிலிருந்து மீண்டெழுந்தாலும் வயிற்றுக்கடுப்பு நோயினால் பீடிக்கப்பட்டு நோய்க்கடுமையால் 1921 செப்டெம்பர் 12 ஆம் திகதி இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.
தத்துவம் கலைகள் சமூகம் சார்ந்ததாக கட்டுரைகள் எழுதியதுடன் அவைகள் யாவும் படித்து பயன்பெறுவதற்காகவே எழுதப்பட்டுள்ளன என்று பாரதியே கூறியுள்ளார். இவரின் உரைநடை மிக வலிமையானதுடன் மக்களை சிந்திக்க தூண்டவல்லது. சொல்லிலே உணர்வும் நடையிலே எளிமையும் சிந்தனையில் தெளிவும் கருத்திலே செறிவும் தரக்கூடிய உரைநடைச் சொல்லாடல்களாகவே பாரதியின் கட்டுரைகள் அமைந்துள்ளன.
தமிழிலக்கிய உலகம் போற்றும்
மீசைக்கவிஞனும் முண்டாசுக் கவிஞனுமான பாரதி தமிழ்மொழியின் மீது பற்றுடையவராக திகழ்ந்ததுடன் கவிதையிலும் உரைநடையிலும் புலமை கொண்டு நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். தமிழர் நலன் இந்திய விடுதலை சாதி மறுப்பு சமயங்கள் சார்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியதுடன் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலையுணர்வை ஊட்டியவரான பாரதி இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இத்திய விடுதலைப் போராட்டத்தை பாரதப் போராகவும் பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி பாஞ்சாலி ச பதத்தை படைத்திருந்தார்.
அழகிய இலக்கிய நயத்தையும் கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாஞ்சாலி சபதம் விளங்குகின்றது. பழந்தமிழ்க் காவியங்களின் மீது பற்றுடையவனான பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவர். இலக்கணச் சட்டங்களை தகர்த்தெறிந்த பாரதி புதுக்கவிதை என புகழப்படும் எளியவரும் கேட்டுணரும் வசன கவிதையை தந்ததுடன் கேலிச்சித்திரம் எனும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும். பெண்களின் கல்வியறிவுக்காக சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வ சாதி படைக்கவும் பெண்கள் தகுதியுடையவர்கள் என்று கண்டார்.
எட்டயபுரம் சென்னை திருவல்லிக்கேணி ஆகிய பாரதி வாழ்ந்த இடங்கள் பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் இவரின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
குயிற்பாட்டுஇ கண்ணன் பாட்டு சுயசரிதை தேசிய கீதங்கள் பாரதி அறுபத்தாறு ஞான இதோத்திர விடுதலைப் பாடல்கள் விநாயகர் நான்மணிமாலை பாரதியார் பகவத் கீதை(பேருரை) பதஞ்சலி யோக சூத்திரம் நவதந்திரக் கதைகள் உத்தம வாழ்க்கை சுதந்திரச் சங்கு ஹிந்து தர்மம்(காந்தி உபதேசங்கள்) சின்னச் சிறு கிளியே ஞானரதம் பகவத் கீதை சந்திரிகையின் கதை பாஞ்சாலி சபதம் புதிய ஆத்திசூடிஇ பொன் வால் நரி ஆறில் ஒரு பங்கு என்பன பாரதியாரின் படைப்புகளாகவுள்ளன.
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன் இவாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி.
....... பாரதி.......
பாக்கியராஜா மோகனதாஸ்.
