நாவிதன்வெளி பிரதேச சபை க்குட்பட்ட சொறிக்கல்முனை கிரா மத்தில் பொதுநூலகம் இன்மை யினால் மாணவர்களும் வாசகர்களும் பல்வேறு அசெளகரிய இடர்ப் பாடுகளுக்கு உள்ளாவதாக தெரிய வருகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது....
நாவிதன்வெளி பிரதேச செயலக சபைக்குட்பட்ட 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஓரிரு நூலகங்கள் மாத்திரம் இயங்கும் நிலையில் சவளக்கடை அன்னமலை சாளம்பங்கேணி வேம்படித்தோட்டம் 7 ஆம் கிராமம் வேப்பையடி 15 ஆம் கிராமம் இலுப்பைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் நூல் நிலையம் இன்மையினால் அதி தொலைவிலுள்ள கல்முனை பொதுநூலகத்திற்கு நாளாந்தம் செல்ல வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்தில் மாணவர்களின் அத்தியவசிய தேவை நலன் கருதி பொதுநூலகத்தினை அமைத்துத் தருமாறு அமைச்சு மற்றும் மக்கள் பிரதிநிநிகளிடம் பல தடவை கோரிக்கை விடுத்தும் பயனற்றதாகவே இருக்கின்றது என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
நாவிதன்வெளி கல்விக்கோட்டத்திற்குள் உயர்தரஇ இடைநிலை மற்றும் ஆரம்ப பிரிவு என 21 பாடசாலைகள் இயங்கும் நிலையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கு தேவையான நூலகமின்மையினால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதுடன் பரீட்சை பெறுபேறுகளிலும் மிகுந்த பின்ன டைவுக்குள்ளாவதாக பாடசாலை சமூகத்தினால் கவலை தெரி விக்கப்படுகிறது.
கிராம மக்களினதும் மாணவர்களினதும் அத்தியாவசிய தேவை கருதி சகல வசதிகளுடனும் கூடிய பொது நூலகத்தை அமைத்துத் தருமாறு சமூகமட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்களால் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
செய்தியாளர் : பா.மோகனதாஸ்
