மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கற்சேனை கிராம மக்கள் குடிநீர் இன்மையினால் அவதி நிலையில் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இக்கிராம சேவையாளர் பிரிவில் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதுடன் இங்குள்ள பொதுமக்கள்இ பொதுக்கிணறு மற்றும் குளத்து நீரையே நாளாந்தம் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொடிய வரட்சியினால் பொதுக்கிணறுகளில் நீர் வற்றியுள்ள நிலையில் குளம்இ குட்டையில் உள்ள குளத்து நீரையே பருகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வரட்சியுடனான காலநிலை நிலவுவதனால் கிணறு ஆறு மற்றும் குளங்கள் ஆகியவை வற்றிய நிலையில் அம்பிளாந்துறை போன்ற தூர இடங்களி இருந்தே குடிநீரை மண் குடங்களில் சுமந்து வருவதாகவும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் அவதிக்குள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குடிநீர்த் தேவை கருதி நீர்த்தாங்கி நீரினை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை பிரதேச சபை மேற்கொள்ள வேண்டுமெனவும்இ நீழ்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரும் அத்தியாவசிய தேவையுணர்ந்து குழாய் நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர்- பா. மோகனதாஸ்

