போரதீவுப்பற்று பிரதேச சபை இருக்கும் வளங்களைக் கொண்டு சிறப்பாக சேவைகளை முன்னெடுத்தாலும்இ சேவை பெற வரும் சபைக்குட்பட்ட 43 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள பொதுமக்கள்இ அன்றாட சேவைகள் பெறுவதில் கால தாமத நிலைக்குள்ளாவதா அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மண்டூர் மற்றும் பழுகாமத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப அலுவலகங்கள் இயங்கினாலும்இ அவ்விரு அலுவலகங்களிலும் ஆளணி பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவுவதனால் பொதுமக்கள் சேவை பெறுவதில் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போதைய கொரோனா கொடிய தொற்றுப் பரவல் நோய் நிலைச் சூழலில் சபைக்குட்பட்ட அரச அலுவலகம் மற்றும் பொது இடங்களில் தொற்றுநீக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறைவாகவுள்ளதாகவும் திண்மக்கழிவு சேகரிப்பு குடிநீர் விநியோக சேவை கிராமிய நீர் வழங்கல் திட்டம் என்பன முறையாக முன்னெடுக்கப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலையுடன் அங்கலாய்க்கின்றனர்.
எனவே பொதுமக்களின் சேவை நலன் கருதி சபை அலுவலக மற்றும் வெளிக்கள வேலைகளுக்கு பணியாளர்களை நியமித்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுமாறு மாகாண உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது.
