மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிகளவு குருதி தேவை உள்ளதனால் குருதி கொடையாளர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக குருதிக் கொடையாளர்களின் வரவு கணிசமாக குறைந்துள்ளமையினாலே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட குருதி பக்கெற்றுக்கள் தேவைப்படுவதனால் குருதித் தானம் செய்ய முன்வரும் குருதிக் கொடையாளர்கள் பாதுகாப்பான விதிமுறைகளுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவை நாடி குருதிக் கொடைகளை வழங்குமாறும் குருதிக் கொடையாளர்களுக்கு அன்டிஜென் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்- பா.மோகனதாஸ்
