கல்முனை இராணுவத்தினரால் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமானரீதியில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்முனை இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் விஜயக்கோன் தலைமையில் 3 ஆம் பிரிவு விஜயபாகு படைப்பரிவினரால் இவ் மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
பெரியநீலாவணைக் கிராமத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்கள் இராணுவத்தினரிடம் விடுத்தவேண்டுகோளுக்கமைய குறித்த வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற கல்முனை இராணுவப்பொறுப்பதிகாரி மேஜர் விஜயக்கோன் இவ் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தார்.
கல்முனை இராணுவத்தினர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
செய்தியாளர்- செ.துஜியந்தன்

