புதியதொரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. அவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மேம்படுத்துகின்ற சாசனமாகவே அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா லையரசன் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் உருவாக்கத் தேவை தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனங்கள் தமிழ்மக்களின் ஒப்புதல் இன்றியே கொண்டுவரப்பட்டது. குறிப்பாகக் கூறுவதாக இருந்தால் தமிழ் பிரதிநிதிகள் அரசியல் சாசன வரைபுகளில் பங்குதாரர்களாக இருந்ததில்லை.
கோத்தாபய அரசாங்கம் தன்னை ஒரு சிங்கள பௌத்த அரசாங்கமாக காட்டிக்கொள்வதிலேயே பெருமையடைகிறது. இவ்வாறானவர்கள் உருவாக்கும் அரசியல் சாசனம் எவ்வாறு அமையும் என்பதை யாரும் கூறி நாம் அறிய வேண்டியதில்லை. ஜனாதிபதியினுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் இந்த நாடு எதனை நோக்கி செல்கிறது என்பதனை வெட்ட வெளிச்சமாக காட்டி நிற்கிறது.
சிவில் நடவடிக்கைகளில் ராணுவ தளபதிகளின் நியமனங்கள்இ தமிழ் பிரதேசங்களில் சிங்கள பௌத்த பிக்குகளையும் பேரினவாதிகளையும் உள்ளடக்கிய தொல்லியல் செயலணி போன்ற நடவடிக்கைகளைப் பார்க்கின்றபொழுது புதிய அரசியல் சாசனம் என்பது இலங்கைஇ பல்லின மத மொழி கொண்ட நாடு என்று ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.
ஏனைய தேசிய இனங்களுக்கான இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டினுடைய சகல பிரஜைகளையும் சமத்துவமாக மதித்து ஓர் அரசியல் சாசனத்தைக் கொண்டுவந்தால் அது ஓர் அர்த்த புஸ்டியுள்ள செயற்பாடாக அமையும். ஆனால்இ இந்த அரசாங்கம் அவ்வாறு செய்யாது என்பது வெளிப்படை.
இவ்வாறான சூழ்நிலையில் ஒரு புதிய அரசியல் சாசன செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சரியான நிலைப்பாடுகளுடன் செயற்படுவதானது விரும்பத்தக்கதும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும் என்றார்.
செய்தியாளர் : பா.மோகனதாஸ்.
