கல்முனை பிரதேசத்தில் நீர்க்கட்டணங்களைச் செலுத்தாத நீர்ப் பாவனையாளர்களிடம் இருந்து கட்டணங்களை அறவீடு செய்யும் நடமாடும் காசாளர் சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மருதமுனை நீர்வடிகாலமைப்புச் சபையினால் பாண்டிருப்புக் கிராமத்தில் நீர்க்கட்டணங்களைச் செலுத்தாத பாவனையாளர்களிடம் இருந்து வீடு வீடாகச் சென்று கட்டணங்களை அறவீடு செய்யும் நடமாடும் காசாளர் சேவை முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று முடக்கம் காரணமாக நீர்க்கட்டணங்களை செலுத்த முடியாத பாவனையாளர்களின் வீடுகளுக்குச் சென்ற நீர்பாசன வடி காலமைப்புச் சபை உத்தியோகத்தர்கள் விரும்பியவர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்தலாம் எனக்கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக்; ஒலிபெருக்கி மூலம் கிராமங்களில் முன் அறிவித்தல் வழ ங்கப்பட்டுவருவதுடன். நீர்வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் கட்டணங்களை பெற்றுக்கொண்டு அதற்கான ஆதாரங்களையும் வழங்கிவருகின்றனர்.
செய்தியாளர்-செ.துஜியந்தன்

