உணவுத் தட்டுப்பாடு தொடர்பிலான அவசர கால நிலைப் பிரகடனம் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்....
73 ஆண்டுகளையும் மாதங்களாக மாற்றி 444 ஆல் வகுத்துப் பார்க்குமிடத்து சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பொருள்கோடல் செய்ய முடியும். அப்படியென்றால் அடிப்படை வாத ஆட்சியினை முன்னெடுப்பதற்கு அவசரகாலச் சட்டங்களின் பிரயோகங்கள் உதவியுள்ளன. அவசரகாலச் சட்டம் என்பது மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்ற மட்டுப்படுத்துகின்ற இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்கக்கூடிய சட்டவிதிகளைக் கொண்டுள்ள செயற்பாடாகும்.
இந்தச் சட்டத்தின் கீழ் இராணுவத்திற்கும் மக்களைக் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு. வழக்கமாகப் பொலிசாருக்குக் காணப்பட்ட கைது செய்கின்ற அதிகாரம் இராணுவத்திற்கும் கிடைக்கின்றது. மேலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களையோ ஊர்வலங்களையோ ஜனநாயக வழி முறையிலும் செய்ய முடியாது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதமாகச் செய்ய வேண்டியதும் இல்லை. அதேவேளை ஜனாதிபதி அவசர காலச் சட்டத்தின் கீழ் தனது அதிகாரங்களை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்கு வசதிகள் உண்டு. எனவேஇ இந்த வேளையில் எதிர்க்கட்சியினர் சாதாரண பொதுமக்கள் மேற்கொள்ளுகின்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகார இரும்புக்கரம் கொண்டு கடுமையாக அடக்கி ஒடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனால் எதிர்க்கட்சியினர் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் 1971 இ 1988 1989 காலப்பகுதிகளில் ஜே.வி.பி.யினரால் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை ஜனநாயக வழிமுறைகளால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தமிழரக்கட்சியினதும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியினதுமான அறவழிப் போராட்டம் 1949 முதல் 1979 வரை கடந்த 30 ஆண்டுகள் நடைபெற்றன.
ஜனநாயக வழி முறைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டதாலும் ஏமாற்றப்பட்டதாலும் பின்னர் ஆயுத வழிப் போராட்டம் தமிழ் இளைஞர்களால் 30 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அரசியல் வழிமுறைகளால் தீர்ப்பதை விடுத்து அடிப்படை வாதமானது அவசர காலச் சட்டத்தினை மாதமொரு முறை பாராளுமன்றத்தில் மூலமாக நீடித்து அடக்குமுறையினையும் ஒடுக்கு முறையினையும் அடிப்படைவாத ஆட்சியாளர்கள் கையாண்டனர். அப்படிப் பார்க்கின்றபோது எமது நாட்டில் 444 தடவைகள் அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆயின் இந்த நிலைமை ஜனநாயகம் சட்டவாட்சி மனிதவுரிமைகள் என்பவற்றுக்கு விடுக்கப்பட்ட சவால்களாகவே பார்க்க முடியும்.
இப்படியான ஆட்சி முறைகளால் நாட்டில் சமாதானமோ தேசிய ஐக்கியமோ அபிவிருத்தியோ ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். அரசியல் பிரச்சினைகளுக்குக் காலா காலத்தில் அரசியல் தீர்வு காணப்பட்டிருக்குமாயின் அவசரகாலச் சட்டச் செயற்பாடுகள் தேவைப்பட்டிருக்காது. உயிரழிவுகள்இ சொத்துகள் அழிவுகள் மனித உரிமை அவலங்கள் ஏற்பட்டிருக்காது. உள்நாட்டு நெருக்கடிக்கள் சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது.
கடந்த காலப் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு தவறுகள்இ தப்புகளைத் திருத்திக்கொள்ளாதவரை தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு எட்டப்படாத வரை கடந்த காலம்இ நிகழ்காலம் போன்று எதிர்காலமும் மக்களுக்கு நம்பிக்கையற்றதாகவே அமையும். அடிப்படை வாதம் அவசர காலச் சட்டங்களே நாட்டை ஆட்சி செய்யும். நாட்டில் ஐக்கியமோ அபிவிருத்தியோ ஏற்படாது. ஆட்சி செய்யும் கட்சிகள் பெயர்கள்இ நிறங்கள் மாற்றம் அடையலாம் ஆனால் அடிப்படை வாதந்தான் ஆட்சி செய்யும். அதற்கு அவசரகாலச் சட்டங்கள் அனுசரணை வழங்கும். வாக்களிக்கும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாதவரை அதுவும் குறிப்பாக 74 வீதமான சிங்கள மக்களின் மனங்கள் மாறாதவரை எதிர்காலமும் எமக்கு நம்பிக்கை அளிக்கப்போவதில்லை. கொரோனா தொற்றுக்களுக்குள் வாழப்பழகிக் கொள்வதுபோல் அவசர காலச் சட்டங்களுக்கும் மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். இப்படித்தான் செல்கிறது எமது மக்களின் ஜனாயகம்.
செய்தியாளர் : பா. மோகனதாஸ்
