இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் இந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள் மாதம் இவ்வளவு சம்பாதிக்கலாம் தினமும் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று வரும் மோசடியான லிங்குகளை ஒரு நாளும் கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஹனி மேக்கிங் ஆப் மூலம் புதிய வகையில் மோசடி நடைபெறுவதால் அதை டவுன்லோடு செய்ய வேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தஅறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பேஸ்புக்கில்இ யூடியூப்பில் டுவிட்டரில் உள்ள கமெண்ட்டுகளில் தினசரி 1000 சம்பாதிக்க மாதம் 30 ஆயிரம் வீட்டில் இருந்தே சம்பாதிக்க என்று வரும் லிங்குகளை கிளிக் செய்வதை அறவே தவிர்ப்பது நல்லது.
எஸ்எம்எஸ்கள்
இதேபோல் இஸியாக பணம் சம்பாதிக்கலாம் அல்லது உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என உங்கள் செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களுக்கு மரியாதை கொடுத்து திறந்து பார்த்தால் உங்கள் பர்சை மட்டுமல்ல உங்கள் அந்தரங்க விவரங்களையும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நிலை ஏற்படலாம் எனவே இதை அறவே தவிர்ப்பது நல்லது.
பணம் திருட்டு
கையில் இருக்கும் செல்போனிலேயே மொத்த பணத்தை அடக்கிவைக்க முடியும் என்பதை டிஜிட்டல் உலகம் காண்பித்துவிட்டது. இதனால் அவரவர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க முடிந்த வரை விழிப்புடன இருப்பது நல்லது ஆசை வார்த்தை குறி வங்கி கணக்கு விவரங்களை வாங்கி ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் ஹேக்கர்கள் அதிகரித்து விட்டார்கள். மக்களிடம் தகவல்களை திருட கண்டுபிடிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர்களிடம் இருந்த விழிப்புடன் இருக்க சைபர்கிரைம் போலீசார் கூறும் அறிவுரைகளை கேட்பது நல்லது.
போலீசார் எச்சரிக்கை
மோசடிகள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பிரபல நிறுவனங்கள் பெயரில் தகவல் அனுப்புகிறார்கள். இதில்இ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக பணம்
மோசடி நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் செல்போனில் டவுன்லோடு ஆகிறது. பிறகு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது டெலிகிராம் மூலமாகவோ மோசடி நபர்கள் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அறிவுரைகள் கொடுத்து குறிப்பிட்ட ஆப் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதற்கான வழிமறைகளை சொல்லி கொடுக்கிறார்கள்.
எப்படி ஏமாறுவீர்கள்
அவர்கள் கூறியபடி அந்த ஆப் இணைந்தவுடன் ஒரு போனஸ் தொகை ரூ.101 பயனாளியின் கணக்கிற்கு வந்துள்ளதாக அந்த ஆப் காட்டும். அடுத்து மோசடி நபர்கள் பயனாளியை அந்த ஆப்பிலிருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுவார்கள். அதற்கானஇ கமிஷன் தொகை பயனாளிக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். அவ்வாறு பொருளை வாங்குவதற்கு மக்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர் கூறுகின்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும். ஆனால் பொருளை விற்ற பிறகு கிடைக்கின்ற பணம் மற்றும் கமிஷன் தொகை பயனாளியின் வங்கி கணக்கிற்கு வருவதில்லை.
Nivedha Pethuraj கொடுத்த புகாரால் Restaurantஐ இழுத்து மூடிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
மேக்கிங் ஆப்
அதற்கு மாறாக அந்த ஆப்பில் பணம் உள்ளதாக காட்டும். அப்படி அந்த ஆப்பில் காட்டும் பணத்தை எடுக்க பயனாளிகள் தங்களது வங்கி கணக்கை இணைக்கும் போது மோசடி நபர்கள் பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவேஇ தற்போது ‘HONEY’ மற்றும் ‘MAKING’ என்ற பெயரில் உள்ள ஆப்களை மக்களிடம் பயன்பாட்டில் மோசடி நபர்கள் விட்டு அதன் மூலம் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற ஆப்புகளை செல்போனில் டவுன் லோட் செய்ய வேண்டாம்.' இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
