மாகாண சபை உள்ளூராட்சி மன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளில் தற்போதுள்ள விகிதாசார முறை முழுமையாக நீக் கப்படுமானால் எண்ணிக்கையில் சிறிய இனங்கள் சிறிய கட்சிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மாகாண சபை உள் ளூராட்சி மன்றம் மற்றும் பா ராளுமன்றத் தேர்தல் முறைமைகள் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்...
அரசியல் தீர்வின் போது மாநிலங்களுக்கு ஆகக் குறைந்தது கூட்டாச்சி (சமஷ்டி ) ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த சமஷ்டி அரசுகள் தமது பகுதியிலுள்ள தேர்தல் முறைகளை தீர்மானிக்கும் அதிகாரம் வழங்குவதன் மூலம் பாரபட்சங்களை நீக்க முடியும். எத்தனையோ உலக நாடுகளில் சமஷ்டி அரசுகள் இருக்கின்றன.
சிங்களத் தலைவர்கள் சமஷ்டி என்று சொன்ன போது அதை தமிழ்த் தலைவர்கள்இ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சமஷ்டி என்பது தனி நாட்டுக் கோரிக்கை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் 1926 ஆம் ஆண்டு
மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து சமஷ்டி அரசுகள் மூலமே இலங்கைத் தீவிலே நிர்வாகத்தை நடத்த முடியும் என்று சொன்னது மாத்திரம் அல்ல கோல்புரூக் ஆணைக்குழு முன்னிலையில் ஆணைக்குழுவினுடைய கூட்டங்களில் கண்டியில் இருக்கக்கூடிய ஒரு சபையாக அதில் தோன்றி மலையகத்தினருக்கு ஒரு சமஷ்டி அரசும் வடக்கு கிழக்குக்கு ஒரு சமஷ்டி அரசும் வடகிழக்குத் தவிர ஏனைய பகுதிகளிலே இருக்கக்கூடிய கரையோரங்களுக்கு ஒரு சமஷ்டி அரசு என்று 3 சமஷ்டி அரசுக் கோரிக்கைகள் பண்டாரநாயக்க தலைமையில் முன் வைக்கப்பட்டது.
மேலும் 1957 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தம் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவிற்கும் தமிழர் தலைவர் தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தம் பௌத்த பிக்குகள்இ சிங்கள தீவிரவாதிகளின் எதிர்ப்பினால் அன்றைய பிரதமரால் கிழித்து எறியப்பட்டது.
பல நீண்ட காலத்திற்கு பின்னர் பண்டா - செல்வா ஒப்பந்தம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தால் இலங்கையிலே இனப்பிரச்சினை இருந்திருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட கூறி இருந்தார்கள். அது மாத்திரமல்ல பின்னாளில் அரசியலமைப்பு 1972 லே கொண்டு வரப்பட்ட பொழுதும் அன்றைய தமிழர் கூட்டணியில் இலங்கைத் தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளை அப்போதைய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில்தான் இப்போது சமஷ்டியை ஒரு பிரிவினையாக சொல்பவர்களுக்கு எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும்.
இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்பட்ட அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் சொல்லப்பட்ட காணிஇ பொலீஸ் அதிகாரங்கள் அதன் கீழ் 42 ஆவது மாகாண சபை சட்டத்தின் மூலம் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களும் அமுல்படுத்தப்படவில்லை என்றார்.
செய்தியாளர் : பா.மோகனதாஸ்
