போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை வீதிக்கு கொங்றீட் இடும் ஆரம்ப வேலைத்திட்டம் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளர் சிவபாதம் தயானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆனந்தசிறி கட்சியின் அமைப்பாளர் சிவபாதம் தயானந்தன் ஆகியோரால் கொங்றீட் இடப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர் ஒப்பந்ததாரர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்றலுடனேயே இந்நிகழ்வு முழுமை பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பரிந்துரைக்கேற்பவே 2km தூரமுள்ள இவ் வீதி புனரமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.
- பா.மோகனதாஸ் -

